பாரிய மோசடியில் சிக்கிய பெண்: தெரிந்தால் உடன் அழைக்கவும்
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த பெண்ணை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
ரக்வான பொலிஸ் நிலையத்தில் 5 பெண்கள் அளித்துள்ள முறைப்பாட்டைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தலுகொட ஆராச்சிலகே ஹர்ஷனி பிரியந்திகா என்ற 40 வயதுடைய பெண் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தொலைபேசி எண்கள்
சந்தேகநபர், தனது வீட்டை விட்டு தப்பியோடி தலைமறைவாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நிலைய அதிகாரி ரக்வான - 071 - 8591394
நிலைய அதிகாரி குற்றப்பிரிவு - 071 - 8593808
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri