கச்சதீவில் சங்கிலி அறுத்த பெண்ணுக்கு நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு
புனித கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தில் தங்க சங்கிலியை அறுத்த பெண்ணொருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நேற்று முன்தினம் மாலை புனித கச்சதீவு அந்தோணியார் ஆலயத்தின் திருச்சிலுவை பவணியின் பொழுது திடீரென பெண்ணொருவர் பவணியில் இருந்த பெண்ணொருவரின் நான்கு அரை பவுண் சங்கிலியை அறுத்துள்ளார்.
உடனடியாகவே கடமையில் இருந்த பொலிஸார் குறித்த பெண்ணை மடக்கி பிடித்து கைது செய்து சங்கிலியை கைப்பற்றியுள்ளனர்.
விளக்கமறியல்
இதேவேளை சந்தேகநபர் தனது முகவரி தொடர்பாக மூன்று இடங்களை பொலிசாருக்கு கூறிய நிலையில் கச்சதீவுக்கு வருகை தந்த நீதவான் சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
அத்தோடு, மேலதிக குற்றச்சம்பவங்கள் பதிவு செய்யப்படவில்லை என நெடுந்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan
