யாழில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் இன்றையதினம்(19) திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதன்போது காரைநகர் - களபூமியைச் சேர்ந்த 50 வயதுடைய கேதீஸ்வரன் சசிகலா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திடீரென மயக்கம்
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் இன்று காலை கோவிலுக்கு செல்வதற்கு தயாராகியவேளை திடீரென மயக்கமுற்றுள்ளார்.

இந்நிலையில் காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam