மட்டக்களப்பு படுகொலையில் சிஐயிடம் சிக்கிய பெண்! வெளிவரும் அதிர்ச்சி அறிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தினையே உலுக்கிய கொலை மற்றும் கொள்ளைச்சம்பங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், குறித்த சம்பவங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளும் கைதுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், மயக்கமடைய செய்ய பயன்படுத்தப்படும் ஒரு தொகுதி மருந்துகளும் நேற்று மாலை கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப்பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் திகதி மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் கடத்தப்பட்ட பெண் 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு கிணறு ஒன்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டிருந்தார்.
இந்த கிணற்றிலிருந்து மேலும் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் இது பரபரப்பை அதிகரித்திருந்தது.
இவ்விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,