வவுனியாவில் தீயில் எரிந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
வவுனியா - தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் தீயில் எரிந்து படுகாயமடைந்த பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கடந்த வாரம் தனது வீட்டில் இருந்த சமயம் தீயில் எரிவதை அவதானித்த அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த அமல உட்பவம் (வயது 37) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
மரணம் தொடர்பான விசாரணைகள் வவுனியா நகர திடீர் மரண விசாரணை அதிகாரியான சிவநாதன் கிசோரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025





சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
