யாழில் துப்பாக்கி முனையில் மிரட்டி இளம் பெண்ணின் கழுத்தை அறுத்து கொள்ளை
யாழ்.செம்பியன்பற்று வடக்கு, முனை பகுதியில் துப்பாக்கி முனையில் மிரட்டி பெண்ணின் கழுத்தை அறுத்து கொள்ளையிட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது சு. டேனுஜா (வயது 21) என்ற குடும்ப பெண் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று இரவு எட்டு பேர் கொண்ட கும்பலொன்று தம்மை பொலிஸார் என கூறி,வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த குடும்ப பெண்ணை அச்சுறுத்தியதுடன், கழுத்தையும் அறுத்துள்ளனர்.
இதன்போது வீட்டில் இருந்த 25 பவுண் நகை மற்றும் 83 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க நபரொருவர் பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரிடம் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
அருண் விஜய் முதல் சாய் அபயங்கார் வரை.. விஜய்யின் TVKவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த நட்சத்திரங்கள் லிஸ்ட் Cineulagam