இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்து செல்லப்பட்ட மூவரில் யுவதியின் சடலம் மீட்பு: தேடும் பணிகள் இடை நிறுத்தம் (VIDEO)

Vavuniya Nuwaraeliya Deathbody Waterfall
By Thirumal Apr 13, 2022 02:06 PM GMT
Report

புதியஇணைப்பு

நுவரெலியா - கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்தோரைத் தேடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அப்பகுதியில் பெய்து வரும் வலை மற்றும் மற்றும் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இன்று மாலை தேடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டது. காணாமல் போயிருந்த மூன்று பேரில், இருவர் இதுவரை மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று இரண்டாவது நாளாகவும் கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பிரதேச வாசிகள் இணைந்து முன்னெடுத்த தேடுதலின் போதும் ஒரு யுவதியின் சடலமே கண்டு பிடிக்கப்பட்டது.


எனினும், இளைஞர் ஒருவரினதும், யுவதி ஒருவரினதும் சடலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை. பெய்து வரும் மழை இதேவேளை நாளையதினம் யுவதியையும், இளைஞரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படும் என கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்து செல்லப்பட்ட மூவரில் யுவதியின் சடலம் மீட்பு: தேடும் பணிகள் இடை நிறுத்தம் (VIDEO) | Woman Away In The Irampodai Waterfall Recovered

இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்து செல்லப்பட்ட மூவரில் யுவதியின் சடலம் மீட்பு: தேடும் பணிகள் இடை நிறுத்தம் (VIDEO) | Woman Away In The Irampodai Waterfall Recovered

முதலாம் இணைப்பு 

நுவரெலியா - கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்றவேளை இவர்கள் குறித்த நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டுக் காணாமல்போயிருந்த நிலையில் இன்று காலை யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஏனைய ஒரு யுவதியும், இளைஞனும் நீரில் மூழ்கிப் பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்களின் சடலங்களை மீட்பதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து 2ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.


வவுனியா மாவட்டத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் இளைஞர், யுவதிகள் 48 பேர் பேருந்து ஒன்றில், புத்தாண்டை முன்னிட்டு, நுவரெலியாவுக்கு நேற்று சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு சுற்றுலா செல்லும் வழியில் இறம்பொடையில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் பேருந்தை நிறுத்திவிட்டு, நீர்வீழ்ச்சியையும், அதனைச் சூழவுள்ள இயற்கை பகுதிகளையும் பார்வையிடுவதற்கு இளைஞர், யுவதிகள் குழுக்களாகப் பிரிந்து சென்றுள்ளனர்.

இதில் ஆறு யுவதிகளும், ஒரு இளைஞனுமாக 7 பேர் கொண்ட குழுவினர் இறம்பொடை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள ஆற்றுப் பகுதியில் நீராடச்சென்றுள்ளனர். 'செல்பி'களை எடுத்தும் மகிழ்ந்துள்ளனர். எனினும், அவர்களின் சந்தோசம் நீடிக்கவில்லை.

திடீரென நீர்வீழ்ச்சி - ஆற்றுப் பகுதியில் நீர்மட்டம் அதிகரித்ததால் அவர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் கூக்குரல் எழுப்ப, அப்பகுதியில் இருந்து சிலர் வந்துள்ளனர்.

அதற்குள் 4 யுவதிகளை அவர்களுடன் சென்ற இளைஞர் காப்பாற்றிக் கரைசேர்த்துள்ளார். ஏனைய இரு யுவதிகளையும் காப்பாற்ற முற்பட்டவேளையிலேயே மூவரும் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொத்மலை பொலிஸார், நுவரெலியா மாவட்ட இராணுவ முகாமின் இராணுவத்தினர், கடற்படை சுழியோடிகள் சம்பவ இடத்துக்கு வந்து, மீட்புப் பணிகளை ஆரம்பித்தனர். இந்நிலையில் இன்று காலை யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா நெடுங்கேனியைச் சேர்ந்த புவனேஸ்வரன் வினோதனி (வயது - 18), வவுனியா, கல்மடு - ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை மதுசாலினி (வயது- 21) ஆகிய இரு யுவதிகளும், வவுனியாவைச் சேர்ந்த விதுசான் (வயது - 21) ஆகிய மூவருமே காணாமல் போயுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட யுவதி வவுனியா, கல்மடு - ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை மதுசாலினி (வயது- 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரின் சடலம் கற்பாறையொன்றுக்குள் சிக்கியிருந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி யுவதியின் சடலம் மீதான மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சடலத்தை கம்பளை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மலைநாட்டில் தற்போது கடும் மழை பெய்துவருகின்றது. எனவே, நீர்வீழ்ச்சி மற்றும் ஆறுகளின் நீர் மட்டம் திடீரென அதிகரிக்கக்கூடும். எனவே, சுற்றுலா வருபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

GalleryGalleryGallery
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US