திருகோணமலையில் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல்!
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த பெண் இன்று (31.10.2026) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோதே, பதில் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கைது
விற்பனைக்காக வைத்திருந்ததாகக் கூறப்படும் 150 போதைப்பொருள் மாத்திரைகளுடன், விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த 26ஆம் திகதி உப்புவெளி பொலிஸாரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்போது, அவரிடமிருந்து இரண்டு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணமும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.