கொழும்பிலிருந்து யாழிற்கு ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்த பெண் கைது
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஆபத்தான ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை பெருமளவு போதைப்பொருட்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள தரகர்களுக்குப் போதைப்பொருளை விற்பனை செய்வதற்காகப் பயணிகள் பேருந்துகளைப் பயன்படுத்தி சூட்சுமமான முறையில் போதைப்பொருட்களை யாழ்ப்பாணத்திற்குக் கடத்தி வந்து விற்பனை செய்வதைப் பல நாட்களாகச் செய்துவந்துள்ளார்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லியனகேவுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவருடைய வழிகாட்டலில் யாழ். அரியாலை பகுதியில் விசேட சுற்றிவளைப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.
இதன்போது குறித்த பெண்ணை போதைப்பொருட்களுடன் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட போது குறித்த பெண்ணிடம் 5 லட்சம் தொடக்கம் 6 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் இருந்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.



