சமூக ஊடகத்தில் பரவிய காணொளியால் பெண் கைது - சிறுமியை பாதுகாப்பாக மீட்ட பொலிஸார்!
சமூக வலைத்தளங்களில் சிறுமி ஒருவர் தாக்கப்படும் காணொளி வைரலானதைத் தொடர்ந்து பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(31.10.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காணொளி நேற்று(31) சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, எண்டேரமுல்ல பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிறுமியை துன்புறுத்திய பெண் கைது
இதன்போது சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், சிறுமியும் பாதுகாப்பான பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளார். பின்னர் இருவரும் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின்படி, குறித்த தாக்குதல் சம்பவம் ஒக்டோபர் 28ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரான்சில் சீற்றத்தை ஏற்படுத்திய பிரித்தானிய மாணவி: இங்கிலாந்து இளைஞர்களுக்கு கிளர்ச்சி அழைப்பு News Lankasri
ரூ. 634 கோடிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... ஊழல் குறித்து சீரியல் நடிகை ஜனனி அசோக் Cineulagam
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri