கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பாம்புகள் - சிக்கிய பெண்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 6 வெளிநாட்டு பாம்பு இனங்களுடன் இலங்கை பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் பல்லுயிர், கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரியப் பாதுகாப்புப் பிரிவு இணைந்து நடத்திய சோதனையின் போது பெண் சிக்கியுள்ளார்.
தாய்லாந்தில் இருந்து சென்னை வழியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 6E1173 மூலம் சென்னை வந்த 40 வயதுடைய பெண்ணின் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பாம்பு இனங்கள்
Speckled Kingsnake, Yellow Anaconda, Honduran Milk Snakes Ball Python ஆகிய பாம்பு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக விசாரணைகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சுங்கக் கட்டளைச் சட்டம், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் மற்றும் விலங்கு நோய்கள் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












