கொள்ளை சம்பவம் குறித்து பொய்யான முறைப்பாடு செய்த பெண் கைது
கோவிட் தடுப்பு குழுவினரின் சீருடை அணிந்த 6 பேர் கொண்ட குழுவினர், தமது வீட்டுக்கு வந்து, 17 லட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டு சென்றதாக செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை நடத்திய பொலிஸார், முறைப்பாடு செய்த பெண்ணொருவரை கைது செய்துள்ளனர்.
முறைப்பாடு செய்த பெண்ணே இந்த திருட்டை செய்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டதாக மிரிஹான குற்ற விசாரணைப் பிரிவின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையிடப்பட்டதாக கூறப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக கூறப்பட்ட மீகொடை, மினுவந்தெனிய போரெக்கெட்டிய பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு பொலிஸார் சென்றுள்ளனர்.
வீட்டில் பரிசோதனைகளை மேற்கொண்ட போது, கொள்ளையிடப்பட்டதாக முறைப்பாட்டில் கூறப்பட்டிருந்த நடனத்திற்கு அணியும் சில உடைகள் எரியூட்டப்பட்ட இடத்தில் இருந்து சில மாதிரிகளை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து ஏற்பட்ட சந்தேகம் காரணமாக பொலிஸார் முறைப்பாடு செய்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் சகல தகவல்களும் தெரியவந்துள்ளன.
பெண்ணிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளை அடுத்து, கொள்ளையிடப்பட்ட சுமார் 17 லட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்கள் வீட்டிற்கு பின்னால் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தங்க ஆபரணங்களை வைக்கும் பெட்டிகள் தங்கம் புகைப்பட்டிருந்த இடத்திற்கு சற்று தொலைவில் கிடந்த நிலையில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
