போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது
மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் நேற்று(30) கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பண்டார தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சலை வீதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது எறிஸ்டோ நிரோவன் எனும் ஒன்பது போதைப்பொருள் வில்லைகள் மற்றும் 386 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைவஸ்து பாவனை மற்றும்
போதைப்பொருள் விற்பனை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் மற்றும்
மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மா சிங்க ஆகியோரின் பணிப்புரையின்
கீழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






