பொன்னாலையில் கசிப்புடன் பெண்ணொருவர் கைது
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் கசிப்பு விற்பனை செய்து வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றையதினம் ஆயிரத்து ஐந்நூறு மில்லிலீட்டர் கசிப்புடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இக் கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் குறித்த பெண்ணின் கைதிற்கான தகவலை வழங்கியதாகத் தெரிவித்து அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மோட்டார் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டு வீசப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டுக்கோட்டை பொலிஸார் சேதமாக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை மீட்டதோடு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.



