பிறந்த குழந்தையை கைவிட்டு சென்ற பெண் கைது
பிறந்த குழந்தையை பண்டாரகொஸ்வத்தை பிரதேசத்தில் குளத்திற்கு அருகில் மைதானத்தில் கைவிட்டுச் சென்ற பெண்ணை இன்று காலை கைது செய்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையை மீட்டு அம்பியூலன்ஸ் வண்டியில் குழந்தையை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெண்ணொருவர் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற போது குழந்தையின் அழு சத்தம் கேட்டுள்ளது. அப்போது தேடிப்பார்த்ததில் உர பைக்குள் போடப்பட்டிருந்த குழந்தையை அந்த பெண் மீட்டுள்ளார்.
இதனையடுத்து பிரதேசவாசிகள் இணைந்து பொலிஸாருக்கு அறிவித்து அம்பியூலன்ஸ் வண்டியை வரவழைத்து குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri