பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பெண் மரணம்
பேலியகொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
43 வயதுடைய 3 பிள்ளைகளின் தாய் ஒருவரே பொலிஸ் நிலையத்தினுள் உயிரிழந்துள்ளார்.
சுகயீனம் தொடர்பில் குறித்த பெண் பொலிஸாரிடம் தெரியப்படுத்திய போதிலும் பொலிஸ் அதிகாரிகள் அதனை கண்டுக் கொள்ளாமையினால் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலுக்கமைய ஒரு தரப்பினர் பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இந்த பெண் பொலிஸாரால் அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த மோதல் தொடர்பில் உயிரிழந்த பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் தனக்கு சுகயீனமாக உள்ளதென கூறிய போதிலும் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளாமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பேலியகொட, கெமுனு மாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam