ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி!
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமி ஊழியர் ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான தீக்காயங்களுடன் குறித்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறிதித சிறுமிக்கு 16 வயது என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 4ம் திகதி ரிஷாத் பதியுதீனின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது பதியுதீன் எம்.பி.யின் மனைவி உட்பட பலர் வீட்டிற்குள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் உடலில் 70 வீதமான எரிகாயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
காணமடைந்தவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 9 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
