மூச்சு திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் மரணம்
மூச்சி திணறல் ஏற்பட்ட நிலையில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த இளம் பெண்ணொருவருக்கு கோவிட் வைரஸ் தொற்றி இருப்பது திடீர் மரண விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காலி கலேகானா பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த பெண் கடந்த 10 ஆண்டுகளாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் இருந்த போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த பெண் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த பெண்ணுக்கு 10 வயது மகள் இருப்பதுடன் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகிறார்.
உயிரிழந்த பெண்ணின் மரண விசாரணைகளை காலி நகர திடீர் மரண விசாரணை அதிகாரி மருத்துவர் கருணாதில்கக மேற்கொண்டதுடன் பிரேதப் பரிசோதனைகளை கராப்பிட்டிய வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி யு.சி.பி. பெரேரா மேற்கொண்டுள்ளார்.
பெண்ணின் மரணத்திற்கு காரணமாக கோவிட் நிமோனியா என பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam