முல்லைத்தீவில் தவறான நடத்தைக்குட்படுத்தப்பட்ட யுவதி வைத்தியசாலையில் அனுமதி
முல்லைத்தீவு (Mulliativu) - முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாமூலைப்பகுதியில் இளம் யுவதி ஒருவர் இளைஞன் ஒருவரால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண், அயலில் உள்ள வீடொன்றிற்கு தனது நண்பியினை தேடி சென்ற போது நண்பியின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டில் தனிமையில் இளைஞன் ஒருவர் இருந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில், அந்த இளைஞன் வீட்டிற்குள் வரசொல்லி யுவதியினை அழைத்துவிட்டு யுவதியினை தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில், இருந்து தப்பி சென்ற யுவதி தனக்கு நடந்தவற்றை வெளியில் தெரியபடுத்தும் முன்னர் தவறான முடிவெடுக்க முயற்சித்த நிலையில் வீட்டாரால் காப்பாற்றப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் கொடுத்த வாய்முறைப்பாட்டிற்கு அமைய குறித்த இளைஞனை கைதுசெய்யும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான அறிவிப்பு: பணியாளரின் ஆர்வத்தால் உருவான குழப்பம் News Lankasri
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri