நாட்டில் கடுமையாக்கப்படும் புதிய சட்டம்: பொருட்களின் விலைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
நுகர்வோர் அதிகாரசபை இந்த நாட்களில் பொருட்களின் விலை காட்சிப்படுத்தப்படாமை தொடர்பான சட்டத்தை மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின்படி, விற்பனைக்கான ஒவ்வொரு பொருளின் விலையும் குறிக்கப்பட வேண்டும் அல்லது காட்சிப்படுத்தப்படும் வேண்டும் என்பது சட்டமாக காணப்படுகிறது.
ஆனால் சந்தையை அவதானிக்கும் போது இது முறையாக மேற்கொள்ளப்படாததால் பல்வேறு விலைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
இலவச விநியோகம்

இதன்படி, கோதுமை மா பொதிகளின் விலை குறிப்பிடப்படாதது தொடர்பில், நாட்டின் பிரதான கோதுமை மா நிறுவனங்களான Prima மற்றும் Serendib ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகாரசபை பிரிவு தேவையான சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், ஐந்தாம் குறுக்குத் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் விலைகள் காட்சிப்படுத்தப்படாதது தொடர்பில் அண்மையில் சோதனைகள் மற்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சோதனைகளின் போது கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி நுகர்வோர் அதிகாரசபை சட்டத்தின்படி பெரிய அளவிலான வர்த்தக நிலையங்கள் முதல் சிறிய கடைகள் வரை ஒவ்வொரு இடத்திலும் விற்பனைக்கு வைக்கப்படும் ஒவ்வொரு பொருளின் விலையையும் குறிக்க வேண்டும் அல்லது காட்சிப்படுத்துவது கட்டாயம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
அவ்வாறு செய்யாத இடங்கள் தொடர்பாக மாவட்டம் முழுவதும் தொடர் சோதனை மற்றும் விசாரணை நடத்தப்பட்டு, பொருட்களின் விலைகள் குறிக்கப்படாமலோ அல்லது காட்சிப்படுத்தப்படாமலோ இருந்தால், அவை இலவசமாக விநியோகம் செய்யப்படும் பொருட்களாக மாத்திரமே இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 10 மணி நேரம் முன்
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri