இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியும் - வீ.ஆனந்தசங்கரி

Parliament Kilinochchi Election Senathirajah
By Yathu Sep 09, 2021 02:17 PM GMT
Report

இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியும் எனத் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இப்பொழுது இருக்கின்ற சூழ்நிலையில் தமிழரசு கட்சி தனித்துப் பயணிக்கக்கூடியதான நிலைப்பாட்டில் உள்ளது. இதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சாதக, பாதக நிலை தொடர்பில் ஊடகவியலாளர் அவரிடம் வினவினார்.

அதற்குப் பதில் அளித்த வீ.ஆனந்தசங்கரி,

இதில் ஒரு நன்மை இருக்கின்றது. இதனுடன் தமிழரசு கட்சியின் கதை முடியும். ஏனெனில் தமிழர் விடுதலைக்கூட்டணி என 18பேர் நாடாளுமன்றில் இருந்தனர். தனது சுயநலனிற்காகத் தமிழர் விடுதலைக்கூட்டணியை உடைத்தார் சேனாதிராஜா. இதில் ஒரு வேடிக்கை என்னவெனில், அவரை இரண்டு தடவை தேசிய பட்டியல் ஊடாக நானே நியமித்திருந்தேன்.


நீண்ட காலத்தின் பின்னர் யாழ். மாநகர சபை தேர்தலிற்கு அரசாங்கம் அறிவித்தலை விடுக்கின்றது. அப்பொழுது யாழ்ப்பாணத்திலிருந்த சேனாதிராஜா தேர்தல் கேட்பதெனில் கேட்களாம் எனக் கொழும்பிலிருந்து தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் அப்பொழுது அவர் தான் கேட்க முடியாது எனத் தெரிவித்திருந்தார். யோகேஸ்வரன் கேட்பதற்குத் தயாராக உள்ளார்.

நீங்கள் கேட்காது விடச் சம்மதமா என அவரிடம் கேட்டபொழுது சம்மதம் தெரிவித்தார். குறித்த தேர்தலிற்கான சுவரொட்டிகளை அச்சடிப்பதற்கு சிவபாலன் சென்றபொழுது அவருடன் சென்ற சேனாதிராஜா குறித்த பிரதியில் குறிப்பிடப்பட்டிருந்த தலைவர் என்ற பதத்தை நீக்குமாறு கூறியிருந்தார். ஆரம்பத்திலேயே விசப்பாம்பு போலவே அவர் எம்முடன் பழகியுள்ளார்.

ஆயினும் ஆனந்தசங்கரிதானே தலைவர் எனவும் அது அவ்வாறே இருக்கட்டும் எனவும் தெரிவித்து அச்சுப்பிரதிக்காகக் கையளித்துவிட்டு வந்துள்ளனர். ஆனால் மறுநாள் நோட்டிஸ்  கிடைக்கும்பொழுது அது நீக்கப்பட்டே இருந்தது. அதன் பின்னர் முகுந்தன் அதில் தலைவர் என்ற பதத்தினை கையினால் எழுதியிருந்தார். அவ்வாறானவர்தான் சேனாதிராஜா.

சிவசிதம்பரத்தின் மறைவுக்குப் பின்னர் தலைவர் பதவிக்கான தேர்வு இடம்பெற்றபொழுது அந்த தேர்வில் நானே தலைவராகத் தெரிவு செய்யப்பட்டேன். ஆனால் குறித்த கூட்டத்திற்கு சேனாதிராஜா மாத்திரமே சமூகமளித்திருக்கவில்லை. அவர் தலைமை பதவிக்காகவே அன்றிலிருந்து இன்றுவரை அவர் செயற்படுகின்றார்.

அமிர்தலிங்கம் செத்தால் என்ன, ஆனந்தசங்கரி செத்தால் என்ன. அவருக்கு வேண்டியது தலைமை. இன்று இருக்கின்ற பிரச்சினை என்னவெனில், பெரிய துரோகம் செய்தவர்கள் எல்லோரும் ஒன்றாக வந்தார்கள். இன்று அவர்கள் பிரிந்து உள்ளனர். செல்வம் அடைக்கலநாதன் யார்? தர்மலிங்கத்தின் மரணத்திற்குக் காரணம் செல்வம் அடைக்கலநாதன்.

ஆனால் தர்மலிங்கத்தின் மகனும், செல்வம் அடைக்கலநாதனும் கையெழுத்திடுகின்றனர் பதவிக்காக. தர்மலிங்கத்தின் மகனே புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன். சித்தார்த்தனும், மன்னாரில் தூள் வித்தவரும்தான் இன்று கட்சித் தலைவர்கள். மன்னாரில் தூள் வித்தமை தொடர்பான பத்திரிகை செய்திகள் என்னிடம் கைவசம் உள்ளது.

யாரை எடுத்தாலும் சரியில்லை என்றவர்கள் இன்று சம்பந்தனும் சேனாதிராஜாவும்தான் சரியென்றால் அவர்களின் வரலாற்றை எடுத்துப் பார்க்க வேண்டும். இந்த நாட்டிலே தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட அழிவுகளிற்கு முக்கிய காரணம், இந்த நிலை இவ்வாறு தொடர்வதற்கு முக்கிய காரணம் இருவரேயாகும்.

எங்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழி எனது நீண்டகால அனுபவத்தின்படி இந்திய முறைமையை ஒத்ததேயாகும். அதற்கு இன்று ஜனாதிபதி உள்ளிட்ட பலருடனும் பேசியிருக்கின்றேன். கடந்த காலத்தில் கிடைத்த பல்வேறு சந்தர்ப்பங்களை இவர்கள் சரியாகப் பயன்படுத்தியிருக்கவில்லை.

இறுதியில் 3 லட்சம் மக்கள் இறந்ததுதான் மிச்சமானது. அந்த 3 லட்சம் மக்கள் இறந்தமைக்கு காரணமானவர்கள் இவர்கள். எந்த நேரமும் அரசாங்கத்துடன் பேசி நிறுத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருந்தது. இவ்வாறான பல்வேறு சந்தர்ப்பங்களைத் தட்டிக்கழித்தனர். ஆனால் ஜெனிவா தொடர்பில் பேசுகின்றனர். முதல் முதலில் ஜெனிவா தொடர்பில் பேசும்பொழுது, அங்கு சென்று என்னத்தை பேசுவது என்றார்கள்.

நாங்கள் போக வேண்டுமோ எனவும், போகாவிட்டால் நாங்கள் துரோகிகளோ என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களைத் தெரிவித்தனர். ஜெனிவா போகாவிட்டால் நாங்கள் துரோகியா என சிறிதரன் சொல்லியிருந்தார்.

அயல்நாடுகள் அங்கு போகவேண்டாம் எனக் கூறியதாக சேனாதிராஜா கூறியிருந்தார். 4 சாட்சிகள் ஒன்றாக இருந்தார்கள். இப்பொழுது, அவர்கள் பிரிந்து உள்ளனர். அண்மைய செய்திகள் என்னவெனில் அந்த நான்கு பேர்தான் தேசிய அமைப்புக்கள் எனக் குறிப்பிடப்படுகின்றது.

சம்பந்தனுக்கு, செல்வம் அடைக்கலநாதனுக்கு ஜெனிவா விடயம் தொடர்பில் கையாள்வதற்கான எந்த உரிமையும் அவர்களிற்கு கிடையாது மாத்திரமல்ல கடமையும் கிடையாது. ஏனெனில் அவர்கள் இதுவரை காலமும் செய்து வந்தது அவ்வாறான வேலையாகும் எனவும் அவர் இன்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, சின்னப்புதுக்குளம், இறம்பைக்குளம்

14 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US