மதுபான போத்தல்களின் போலி பாதுகாப்பு ஸ்டிக்கர்கள்: நாடாளுமன்றில் கேள்வி
இலங்கையின் மதுபான போத்தல்களுக்கு வரி ஏய்ப்பை தடுப்பதற்காக வழங்கியதாகக் கூறப்படும் இந்திய நிறுவனத்தின் பாதுகாப்பு ஸ்டிக்கரில், சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்தியாவின் குறித்த தனியார் நிறுவனமானது, 2018 ஆம்
ஆண்டில் மதுபான போத்தல்களில் பொருத்தப்பட வேண்டிய பாதுகாப்பு ஸ்டிக்கர்களை
வழங்குவதற்கான ஒப்பந்தத்தை இலங்கை அரசிடம் இருந்து பெற்றதாக தெரிவிக்கபட்டுள்ளது.
எனினும் அந்த நிறுவனத்தினால் அச்சிடப்பட்ட ஸ்டிரிக்கர்களுக்கு பதிலாக போலி பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு பாரிய வரி மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு
இதனையடுத்து டிஜிட்டல் அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவின் தனியார் நிறுவனம் ஒன்று பெறுவதற்கான சாத்தியக்கூறுகள், தொடர்பில் அண்மையில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
எனினும் டிஜிட்டல் அடையாள அட்டைக்கான ஏலம் இன்னும் வழங்கப்படவில்லை என்றும், வெற்றி பெற்ற ஏலதாரருக்கு நவம்பர் அல்லது டிசம்பருக்குள் ஒப்பந்தம் வழங்கப்படும் என்றும் ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை , மதுபான போத்தல்களுக்காக இந்திய தனியார் நிறுவனம் அச்சடித்த ஸ்டிக்கர்களின் தரம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த இரண்டு வாரங்களாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, மதுவரித் திணைக்களத்தினால் இதுவரை 25,000 க்கும் அதிகமான மதுபான போத்தல்கள் போலியான பாதுகாப்பு ஸ்ரிக்கர்களுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எனவே இதன் காரணமாக பாரிய வரி ஏய்ப்பு மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |