நாட்டில் வெவ்வேறு இடங்களில் பெய்த மழையால் வீடுகள் கடும் சேதம்
வவுனியாவில் காற்றுடன் பெய்த மழையின் காரணமாக மதுராநகர் பகுதியில் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
வவுனியாவில் நேற்று மாலை மற்றும் இன்று மாலை மழை பெய்ததுடன், சில பகுதிகளில் காற்றும் கடுமையாக வீசியது.
4 வீடுகள் சேதம்
இதனால், ஆச்சிபுரம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மதுராநகர் பகுதியில் காணப்பட்ட அரைநிரந்தர மற்றும் தற்காலிக வீடுகளின் கூரைப்பகுதி வேலிகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட 4 வீடுகளில் மக்கள் அந்நிலையிலும் தங்கள் வீடுகளில் தங்கி வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.


கந்தளாய் பகுதியில் வீடுகள் சேதம்
கந்தளாய் - சூரியபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திகம பகுதியில் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக 15-க்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
நேற்று(03.04.2026) மாலை 3:00 மணியளவில் திடீரென ஏற்பட்ட கடும் மழையுடன் கூடிய மினி சூறாவளி காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
பலத்த காற்றினால் வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன், சில வீடுகளின் கூரைத் தகடுகள் காற்றில் பறந்து அருகில் இருந்த மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சிகளைப் பார்க்க முடிகின்றது.
மக்களின் கோரிக்கை
திடீரென ஏற்பட்ட இந்த சூறாவளித் தாக்கத்தினால் ஜெயந்திகம பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பல குடும்பங்கள் தமது தங்குமிடங்களை இழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் உடமைகள் குறித்த விபரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பான மேலதிக விபரங்களை அனர்த்த மேலாண்மை பிரிவினருக்கு வழங்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்களைப் பெற்றுத்தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலதிக தகவல் - யூசுஃப்
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
தமிழ்நாடு, ஆந்திராவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல்... கர்நாடகாவில் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri