நீடிக்கும் தாழமுக்க மண்டலம்! வானிலை அவதான மையம் மக்களிடம் முக்கிய வேண்டுகோள்
வானிலையில் ,தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் நீடிப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது, அடுத்த 33 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இலங்கையின் வடக்கு கடற்கரையை அண்மித்து,மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழகத்தை நோக்கி நகரும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக, இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்கலாம்.
இலங்கைத் தீவு முழுவதும் மணித்தியாலத்துக்கு (40-50) கிலோமீற்றா் வரை பலத்த காற்று வீசக்கூடும்.
இந்தநிலையில் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை மையம் பொதுமக்களை கேட்டுகொள்கிறது.