மன்னார் காற்றாலை விவகாரம்! அநுரவின் கருத்திற்கு மதிப்பளிக்கும் மக்கள்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு மதிப்பளிக்கும் முகமாக மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தாம் முன்வைத்துள்ள மூன்று கோரிக்கைகளையும் ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் பிரச்சாரத்திற்காக மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்த போது மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் எந்தத் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படாது என வாக்குறுதி அளித்து இருந்தார்.
மேலும், மக்களை அழிக்கும் எந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினாலும் தாம் அதை இரத்து செய்வதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
ஆனால் அவற்றுக்கு எதிராக தேசியமக்கள் சக்தி அரசாங்கம் செயற்படுவது கவலையளிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.