மன்னாரில் 23ஆவது நாளாக தொடரும் போராட்டம்
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (25) 23வது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இசைமாலை தாழ்வு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஒன்று திறண்டு ஆதரவை வழங்கினர்.
நேற்று காலை மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்ற போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் இசைமாலை தாழ்வு கிராம பெண்கள் அமைப்பு உள்ளடங்களாக இசைமாலை தாழ்வு கிராமத்தை சேர்ந்த அனேகமானோர் வருகை தந்து கலந்து கொண்டு தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.
பலர் பங்கேற்பு
மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை 23 ஆவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் குறித்த போராட்டமானது காலத்தின் தேவை கருதி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த போராட்டத்தின் உண்மை நிலையை அறிந்து கொண்டு தாம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும், தொடர்ந்தும் தமது ஆதரவு இப்போராட்ட குழுவிற்கு கிடைக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.









தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
