விஸ்வமடு பகுதியில் வாழைச்செய்கை காற்றினால் அழிவு(Photos)
முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட விசுவமடு, தொட்டியடி, நாச்சிகுடா ஆகிய பகுதிகளில் கடந்த நாட்களில் வீசிய கடும் புயல் காற்று காரணமாக விவசாயிகளின் வாழைச்செய்கை முற்றும் முழுதாக அழிவடைந்த நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதன்போது வாழச்செய்கையில் ஈடுபட்டிருக்கும் 40க்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழைச்செய்கை இவ்வாறு அழிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில், தொடர்ச்சியாக தமக்கு ஒவ்வொரு வருடமும் காற்றின் காரணமாக வாழைச்செய்கை அழிவடைந்துள்ளது.
இந்நிலையில் இந்த வருடம் அழிவு இல்லை என எண்ணியிருந்த போது திடீரென்று ஒருபோதும் இல்லாத வகையில் இம்முறை பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது.
கால்நடைகளுக்கு தீவனம்
அந்த வாழைகளில் இருந்து பெறவேண்டிய வாழைக்குலைகள் தற்பொழுது கால்நடைகளுக்கு தீவனமாக போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எமது வாழ்வாதாரமே முற்று முழுதாக அளிவடைந்து தற்பொழுது நிர்கதியாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எமக்கு இம்முறையாவது நட்டயீட்டினை பெற்று தர வேண்டும் என கவலை தெரிவித்துள்ளனர்.






பதினாறாவது மே பதினெட்டு 20 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
