மீண்டும் குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மீண்டும் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இன்று(12) முற்பகல் 10 மணிக்கு தங்காலை குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட பெலியத்த சனா என அழைக்கப்படும் வீரசிங்க சரத் குறித்த வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
இதேவேளை, தாம் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தை பொதுவெளியில் வெளியிட்டமை தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் முறையிடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அறிவித்துள்ளார்.
கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று(11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காகத் தமது சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
