பழிவாங்கும் நோக்குடன் செயற்படும் அநுர அரசு! சிஐடியில் இருந்து வெளியில் வந்த விமலின் குற்றச்சாட்டு
புதிய இணைப்பு
கொள்கலன்களை விடுவித்தவர்களிடம் விசாரணை நடத்தாமல் அது தொடர்பில் கருத்து தெரிவித்தவரிடம் விசாரணை நடத்துவது பழிவாங்கும் நோக்கத்திலாகும் என்று விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சோதனைக்குட்படுத்தாமல் சுங்கப்பிரிவினர் விடுவித்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய 223 கொள்கலன்கள் தொடர்பில் ஊடகவியலாளர் மாநாட்டில் தான் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரிப்பதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கத்திற்கு அழைத்துள்ளனர்.
பழிவாங்கும் நோக்கம்
இந்த அரசாங்கம் பழிவாங்குவதை தவிர வேறு எதை செய்கிறது. இந்த அரசு பொய் சொல்வதையே வழக்கமாக கொண்டுள்ளது.
சுங்க வரி அறவிடலாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்களின் என்ன இருந்தது என்று யாருக்கும் தெரியாது, இது அநியாயமாகும்.
இன்று நாட்டில் அங்காங்கே வெடிக்கும் போதைபொருள் துப்பாக்கி வேட்டுக்கள் அந்த கொள்கலன்களில் இருந்திக்கலாம்.
அரசுக்கு பொருளாதார பிரச்சினை தொடர்பில் துளி அளவும் அக்கறை கொள்லாமல் இவ்வாறு தேவையில்லாத செயற்பாடுகளில் ஈடுபடுகிறது என குறிப்பிட்டார்.
முதலாம் இணைப்பு
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் துறையில் முன்னிலையாகியுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் இருந்து சுங்க சோதனை இல்லாமல் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
