அடுத்த இலக்கு விமல்! சிறையில் செய்யப் போகும் வேலைகள் தயார்..
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இருந்து வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக தனக்கு அழைப்பாணை கிடைத்தள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு பின்னர் தான் கைது செய்யப்பட்டால் சிறையில் செய்வதற்கு தனக்குச் சில வேலைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர்கள் என்னை சிறையில் அடைத்தால்..
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நான் வீடமைப்பு விவகார அமைச்சராக இருந்தபோது விற்பனை செய்யப்பட்ட சில கடைகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் என்னை அழைத்துள்ளனர்.
ஒரு திகதியை குறிப்பிட்டு அன்றைய தினம் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக வருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அன்றைய தினம் எனக்கு வேறு ஒரு வழக்கு உள்ளதால் சமூகமளிக்க முடியாது என தெரிவித்து நான் கடிதம் எழுதியுள்ளேன்.
முன்னர் போல அவர்கள் என்னை சிறையில் அடைத்தால் கிடைக்கின்ற நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்துவேன்.
கடந்த தடவை அவர்கள் என்னை சிறையில் அடைத்தவேளை இரண்டு நூல்களை எழுதி ஐந்து ஓவியங்களை வரைந்தேன், இம்முறை சிறையில் அடைத்தால் அவ்வாறு நூல்களை எழுதுவேன் என குறிப்பிட்டுள்ளார்.





சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்தியை உங்களுக்கு நினைவு இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

அமெரிக்காவில் வாளுடன் சுற்றித் திரிந்த சீக்கியர்: சுட்டுக் கொன்ற பொலிஸார்: வெளியான வீடியோ! News Lankasri
