ரஷ்ய விமானம் தடுத்து வைப்பின் பின்னணியில் சதித்திட்டம்! சந்தேகிக்கும் அரசியல்வாதிகள்
அரசியல்வாதிகளின் சந்தேகம்
ரஷ்ய ஏரோப்லோட் பயணிகள் விமானம், கட்டுநாயக்க வானுார்தி தளத்தில் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்
முன்னாள் அமைச்சர்களான டியு குணசேகர, சரத் வீரசேகர மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் இந்த சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர்.
சதித்திட்டமா?
மற்றொரு நாட்டில் செய்துகொள்ளப்பட்ட காப்புறுதியின் அடிப்படையில், ரஷ்ய விமானம் தடுக்கப்பட்டமையின் பின்னணியில், சதித்திட்டம் இருக்கலாமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையுடன் ரஷ்யா பல ஆண்டுகளாக சிறந்த உறவைக் கொண்டிருக்கிறது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ரஷ்யா இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டு வருகிறது.
ரஷ்யாவின் உதவி
அதேநேரம் இக்கட்டான சூழ்நிலையிலும் மசகு எண்ணெய்யை குறைந்த விலையில் தருவதற்கு அந்த நாடு உடன்பட்டிருந்தது.
இந்த சூழ்நிலையில் அந்த நாட்டுடன் ஏற்பட்டுள்ள முறுகல், துரதிஸ்டவசமானது என்றும் குறித்த அரசியல்வாதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை ரஷ்ய விமானம் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு இன்று கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் விசாரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 6 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
