கடும் தீர்மானத்தை எடுக்க தயாராகும் விமல் வீரவங்ச
அமைச்சர் விமல் வீரவங்ச கடும் தீர்மானம் ஒன்றை எடுக்க தயாராகி வருவதாகவும், இது சம்பந்தமாக அவரது வீட்டில் இன்று விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளதாகவும் அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் சம்பந்தமாக ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து கலந்துரையாட இந்த பேச்சுவார்த்தை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை கிழக்கு முனையம் சம்பந்தமான அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்பட்டால் அதனை எதிர்ப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த பேச்சு வார்த்தையில் கலந்துக்கொள்ளுமாறு அமைச்சர் விமல் வீரவங்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 6 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே துறைமுக தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை இன்னும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, துறைமுக தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தை நேற்று ஆரம்பித்தன.
தமது கோரிக்கைக்கு சரியான பதில் கிடைக்கும் வரை தொழிற்சங்க போராட்டத்தை நிறுத்த போவதில்லை என துறைமுக சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுத்தரகே தெரிவித்துள்ளார்.





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
