புத்தளம் - வில்பத்து புதிய தொங்குப் பாலம் திறந்து வைப்பு (Photos)
புத்தளம் எலுவாங்குளத்தில் இருந்து வில்பத்து தேசிய சரணாலயம் வரையான பகுதிக்கான புதிய தொங்குப் பாலத்தினை இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் அஹியூபேர்ட் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.
ஜேர்மன் நாட்டின் நிதியுதவியில், புத்தளம் எலுவாங்குளத்திலிருந்து வில்பத்து சரணாலயம் வரையிலான 66 மீற்றர் தூரத்திற்கான தொங்குப் பாலமொன்று 40 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த தொங்கு பாலத்தை இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் ஷியூபேர்ட் உத்தியோக பூர்வமாக நேற்று (15.12.2022) திறந்து வைத்துள்ளார்.
நினைவுச் சின்னம்
இந்நிகழ்வில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, நினைவுச் சின்னமாக மரத்தால் செய்யப்பட்ட இரண்டு யானைகளின் உருவம் அதிகாரிகளினால் ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் ஷியூபேர்ட் அவர்களுக்கு வழங்கப்பட்டது.