ரிசாத் பதியூதீனுடன் தொடர்புடைய வில்பத்து வழக்கில் இருந்து நீதியரசர் விலகல்
வில்பத்து விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்புக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீன் தாக்கல் செய்த மேன்முறையீட்டின் விசாரணையில் இருந்து உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் விலகிக் கொண்டுள்ளார்.
வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் காடழிப்புகளை மேற்கொண்டு பொதுமக்களை குடியேற்றியதாக முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனுக்கு எதிராக வழங்கப்பட்டிருந்த தீர்ப்புக்கு எதிராக அவர் மேன்முறையீடு செய்திருந்தார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக
குறித்த மேன்முறையீட்டு மனு நேற்றையதினம் (27.04.2026 ) மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வின் முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

அதன்போது நீதியரசர்கள் அமர்வின் தலைமை நீதியரசர் திலிப் நவாஸ் குறித்த வழக்கின் விசாரணையில் இருந்து தான் ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே குறித்த மேன்முறையீட்டு மனுவின் விசாரணையில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri