அமெரிக்காவுக்கு பாதகமாகும் FBI - CIA உளவுத்துறை நியமனங்கள்
முன்னாள் எஃப்பிஐ( FBI) மற்றும் சிஐஏ(CIA ) தலைவரான வில்லியம் வெப்ஸ்டர், தற்போதைய FBI இயக்குநரும் தேசிய உளவுத்துறையின் இயக்குனருமான காஷ் படேல் மற்றும் துளசி கபார்ட் ஆகியோருடைய நியமனங்கள் தொடர்பில் பெரும் கவலை வெளியிட்டுள்ளார்.
டொனால்ட் ட்ரம்பின்(Donald Trump) பரிந்துரைகளை நிராகரிக்குமாறும், அவை அமெரிக்காவுக்கு பாதகமாகும் என்றும் அவர் அமெரிக்க செனட் சபையிடம் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர், அமெரிக்க செனட்டர்களுக்கு எழுதிய கடிதத்தில்,
எஃப்பிஐ மற்றும் சிஐஏ
“எஃப்பிஐ மற்றும் சிஐஏ பதவிகளில் சுயாதீனமான தலைமை காணப்படவேண்டும்.
உளவுத்துறை மற்றும் சட்ட நிறுவனங்களில் பாரபட்சமற்ற தலைமைத்துவத்தை வழங்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதியை விமர்சிப்பவர்களை குறிவைப்பேன் என்று உறுதியான நிலைபாட்டை உடைய ட்ரம்பின் ஆதரவாளர்களே குறித்த பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
உளவுத்துறை சமூகத்தின் திறமை
எங்கள் உளவுத்துறை சமூகத்தின் திறமையான நிர்வாகத்திற்கு உலகளாவிய அச்சுறுத்தல்களின் சிக்கல்களைத் திசைதிருப்பவும் நட்பு நாடுகளின் நம்பிக்கையைப் பேணவும் இணையற்ற நிபுணத்துவம் தேவைப்படுகிறது.
அந்த நம்பிக்கை இல்லாமல் போனால், முக்கியமான இரகசியங்களைப் பாதுகாக்கும் மற்றும் சர்வதேச அளவில் ஒத்துழைக்கும் நமது திறன் வெகுவாகக் குறைந்துவிடும்" என்று வெப்ஸ்டர் குறிப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |