ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவேன்: விஜயதாச திட்டவட்டம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் வெற்றியீட்டுவேன் எனவும் அதன் பின்னர் தமக்கு எதிரான அனைத்து வழக்குகளும் அரசியலமைப்பின் மூலம் இரத்து செய்யப்படும் என்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் கட்சித் தலைமை தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது எனவும் எதிர்வரும் தேர்தலில் புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் “ஜனாதிபதி தேர்தலுக்கு வருவோம்.வெற்றி பெறுவோம்.
கட்சித் தலைமை
அதன்பிறகு என் மீதான அனைத்து வழக்குகளும் அரசியல் சாசனத்தால் இரத்து செய்யப்படும்.
அப்போது கட்சித் தலைமை குறித்து எந்தப் பிரச்சினையும் வராது. கட்சியின் தலைவர்கள் என்று கூறி பதவிகளை வகிப்பவர்கள் கண்டிக்கு வந்தால் அடித்து விரட்டி விடுவார்கள் என சிலர் கூறி இருந்தனர்.
ஆனால் கட்சியில் சிலர் தங்கள் சொந்தப் பணத்தைப் பலப்படுத்த முயற்சிக்கிறார்கள்" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |