பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படுமா? இன்று விசேட கூட்டம்
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடையை தளர்த்துவதா? அல்லது நீடிப்பதா? என்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று இடம்பெறவுள்ளது.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, எதிர்வரும் நாட்களில் வெளியாகின்ற பிசிஆர் பரிசோதனை அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே, எதிர்வரும் 21ம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவது குறித்து தீர்மானம் எட்டப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில், கொழும்பு – தெமட்டகொட பகுதியில் கோவிட் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் ஐவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், இனிவரும் காலங்களில் கடுமையாக சுகாதார கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சுகாதார தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதனிடையே, நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 2,361 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, இந்நாட்டு மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 233,053 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
