இலங்கையில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை
இலங்கையில் பெட்ரோல் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இல்லை என்று எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று (ஜூலை 06) இது தொடர்பில் அமைச்சின் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள்ளார்.
அதில் இலங்கையில் பெட்ரோல் பற்றாக்குறை நிலவுவதாக இணையதளங்களில் வெளியான பல தகவல்கள் அமைச்சர் உதய கம்மன்பிலவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கையில் தற்போது 30 நாட்கள் நீடிக்கும் அளவுக்கு பெட்ரோல் இருப்பு உள்ளது.
மேலும், ஜூலை 19 ம் திகதி 35,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஏற்றிய மற்றொரு கப்பல் இலங்கைக்கு வர உள்ளது.
எனவே, பற்றாக்குறை குறித்த அறிக்கைகள் ஆதாரமற்றவை, இந்த விஷயத்தில் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சம் தேவையில்லை என்று அமைச்சர் கூறியுள்ளதாக செயலர் அறிவித்துள்ளார்