மோடி மற்றும் பசிலுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெறுமா? (செய்திகளின் தொகுப்பு) (Video)
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa )மீண்டும் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
எதிர்வரும் 10ம் திகதி முதல் 12ம் திகதி வரையில் குஜராத்தில் நடைபெறவுள்ள மாநாடு ஒன்றில் நிதி அமைச்சர் பங்கேற்க உள்ளார்.
இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை (Narendra Modi )சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த நவம்பர் மாதம் பசில் ராஜபக்ச இந்தியா விஜயம் செய்திருந்த போதிலும் பிரதமர் நரேந்திர மோடியைச சந்திக்க முடியவில்லை. இந்த நிலையில் பசில் சிறு இடைவெளியில் இரண்டாவது தடவையாகவும் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,