வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுமா? அரசாங்கம் எடுக்கவுள்ள 3 தீர்மானங்கள்
அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்கு இன்னமும் இரண்டு மாத காலப்பகுதிகளே உள்ளன. இதனால் இதுவரையில் வரவு செலவு திட்டம் தொடர்பான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய நீர்ப்பாசனம், நெடுஞ்சாலைகள், விவசாயம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி எதிர்வரும் நவம்பர் மாதம் “உற்பத்தி பொருளாதாரம்” என்ற தலைப்பில் பொருளாதார இலக்குகளை அடையும் வகையில் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.
அடுத்த வருடமும் இந்த வருடம் போன்றே வாகன இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதற்கான யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் காலங்களில் ஏற்படவுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக மின்சார கார்களை ஊக்குவிப்பதற்கும் தயாராகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அது தவிர, அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலும், இந்த ஆண்டை போன்று முடிந்தவரை இறக்குமதிகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதில் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
குறிப்பாக பெரிய அளவிலான காணிகளை மேம்படுத்தும் திட்டங்களுக்காக தனியார் துறையை ஊக்குவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்துவதே வரவு செலவு திட்டத்தின் முக்கிய நோக்கமாக காணப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 1 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan