பயங்கரவாத தடை சட்டம் அரசு தரப்பினரை கைது செய்யுமா...! மா.சத்திவேல் கேள்வி

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Sarath Fonseka Sri Lanka Prevention of Terrorism Act
By Shan Nov 10, 2023 05:40 PM GMT
Report

அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்க முயற்சித்த அரசு தரப்பினரை பயங்கரவாத தடை சட்டம் கைது செய்யுமா? என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளரான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரால் இன்று (10.11.2023) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கடந்த 15 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளான முல்லைத்தீவை சேர்ந்த கனகரத்தினம் ஆதித்தன், மாத்தளையை சேர்ந்த சுப்ரமணியம் சுரேந்திரன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த யோகராஜா நிரோசன் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட அநியாய கொலை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு நிரபராதிகளாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தாமதமான நீதி

கடந்த 2006 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தூதுவரை இலக்கு வைத்து அவர் சென்ற வாகன தொடரணி மீது தாக்குதல் நடத்தினர் எனும் அடிப்படை அற்ற குற்றச்சாட்டின் பேரில் 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 2012 ஆம் ஆண்டு இவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் இன்று மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமண அவர்களால் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடை சட்டம் அரசு தரப்பினரை கைது செய்யுமா...! மா.சத்திவேல் கேள்வி | Will The Terrorism Act Arrest Government Officials

பல்வேறு விதமான கொடூர சித்திரவதைகளை தொடர்ந்து அரசு தரப்பால் குற்றவாளிகளாக்கும் நோக்கில் இவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு தீர்ப்புக்கு 10 வருடங்கள் கடந்துள்ளதோடு, பத்துக்கும் மேலான நீதிபதிகளுக்கு கீழ் 70க்கும் மேற்பட்ட சாட்சிகள் முன்னிலையில், நடத்தப்பட்ட வழக்கில் சந்தேக நபர்களாக்கப்பட்டோரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா தலைமையில், அவரது சட்ட உதவியாளர்கள் பாரிய பங்காற்றி அரசியல் கைதிகளுக்கு நீதியையும் நியாயத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இவ் வழக்கின் தீர்ப்பு கடந்த மே மாதம் வழங்கப்பட திகதி குறிக்கப்பட்ட போதும் தற்போதைய மேல் நீதிமன்ற நீதிபதி புதியவர் என்பதால் வழக்கின் கோவையை படிக்க வேண்டும் என ஒவ்வொரு தவணையிலும் நாள் குறித்து ஆறு மாதங்கள் கடந்த பின்னர் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்புக்கு நீண்ட காலம் சென்றாலும் கிடைத்த நீதிக்காக, அரசியல் நீதிக்காக போராட்டங்களை நடத்தும் மக்களாக மகிழ்வோம். எஞ்சி இருக்கும் அரசியல் கைதிகளும் நீண்ட காலம் சிறையில் உள்ளதை கருத்தில் கொண்டேனும் நீதிமன்றம் அவர்களை விடுவிக்க வேண்டும்.

நட்ட ஈட்டை கொடுப்பது யார்

அரசியல் ரீதியில் அவர்களுக்கான விடுதலை என்பது அரசிடம் இனியும் எதிர்பார்க்க முடியாது என்பதே உண்மை. அவ்வாறு அவர்களை விடுவிப்பதற்கான அரசியல் கூட்டு முயற்சியும் எம் அரசியல் தலைமைத்துவங்களிடம் இல்லை என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பயங்கரவாத தடை சட்டம் அரசு தரப்பினரை கைது செய்யுமா...! மா.சத்திவேல் கேள்வி | Will The Terrorism Act Arrest Government Officials

இன்று விடுதலை செய்யப்பட்டவர்களில் கனகரத்தினம் ஆதித்தன் ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா ஆகியோர் மீதான கொலை குற்றச்சாட்டுகளில் இருந்து குற்றமற்றவராக விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று விடுவிக்கப்பட்டவர்கள் பதினைந்து வருடகாலமாக பிணையின்றி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இளமையில் கைது செய்யப்பட்டு தற்போது இளமையை கடந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குடும்ப உறவுகளோடு கூடி வாழ்ந்து அவர்களுக்காக வாழ வேண்டிய காலத்தையும், தமது எதிர்காலத்திற்கான எதிர்பார்ப்புகளையும் இழந்துள்ளனர். இவர்களின் இளமை கொலை செய்யப்பட்டுள்ளது. இதற்கு நட்ட ஈட்டை கொடுப்பது யார்? எந்த சட்டம்? எந்த நீதிமன்றம் இவர்களுக்கு நட்ட ஈட்டை பெற்றுக் கொடுக்கும். அதேபோன்று அநியாயமாக இவர்களை குற்றவாளிகளாக்க முயற்சித்த அரசு தரப்பினர் பயங்கரவாதிகளாவர். இவர்களை பயங்கரவாத தடை சட்டம் கைது செய்யுமா?

பயங்கரவாத தடை சட்டத்தினை உருவாக்கியவர்கள், அதனை 44 வருட காலமாக பாதுகாத்து தமிழர்களின் இருப்பையும் எதிர்காலத்தையும் அழித்து வருபவர்கள் பயங்கரவாதிகள் என்று கூற வேண்டும். தற்போது பயங்கரவாத தடை சட்டத்தை விட பயங்கரமான பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கின்றனர். அதுவும் பயங்கரவாதமே. இத்தகைய பயங்கரவாத செயலை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் ஜனநாயக ரீதியில் தடுக்காவிடின் முழு நாடும் எதிர்காலத்தை இழக்க வேண்டி ஏற்படும் என தெரிவித்துள்ளார். 

இலங்கையில் இன்னும் அவல நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள்!

இலங்கையில் இன்னும் அவல நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள்!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் சிக்கிய மர்ம பொதி

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் சிக்கிய மர்ம பொதி

இலங்கை கிரிக்கெட்டுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

இலங்கை கிரிக்கெட்டுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
நன்றி நவிலல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US