பாடசாலைகள் மீள திறக்கப்படுமா? கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
கோவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள திறத்தல் குறித்து எவ்வித தீர்மானங்களும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 29ஆம் திகதி முதல் பாடசாலைகள் நான்கு கட்டமாக திறக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில் பாடசாலைகளை மீள திறப்பது குறித்து எவ்வித தீர்மானங்களும் இதுவரை எடுக்கப்படவில்லை.
இவ்வருடத்தில் இடம்பெறவுள்ள தேசிய பரீட்சைகளை நடத்தும் காலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அத் தீர்மானத்திலும் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
கோவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்து நாட்டு மக்கள் அனைவரையும் பாதுகாக்க நெருக்கடியான சூழ்நிலையில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
கோவிட் 19 வைரஸ் காரணமாக கல்வித் துறைக்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ளது. இச்சவாலை வெற்றிக்கொள்ள மறுசீரமைக்கப்பட்ட திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டுள்ளன.
குறுகிய காலகட்டத்தில் பாடத்திட்டங்களை சிறந்த முறையில் நிறைவு செய்ய புதிய கொள்கை திட்டத்தை செயற்படுத்துவது அவசியமாகும்.
பாடசாலைகளை மீள திறத்தல் குறித்து பிரதேச தொடர்பு குழுவினரது பரிந்துரைகளுக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கும் அமையவே தீர்மானம் எடுக்கப்படும்.
பாடசாலைகளை மீளத் திறத்தல் குறித்து பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதே எவ்வித தீர்மானங்களும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam