கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் டொலர்களை ஆட்சியாளர்கள் கொள்ளையிட அனுப்ப மாட்டோம்: வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்கள்
தாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் டொலரை, ஆட்சியாளர்கள் கொள்ளையிட்டு சாப்பிட இலங்கைக்கு அனுப்ப போவதில்லை என வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.
இணையத்தள வலையொளிக்கு நேர்காணலை வழங்கிய வெளிநாடுகளில் தொழில் புரியும் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் இதனை கூறியுள்ளனர்.
தொழில் புரியும் நாடுகளில் வங்கிக் கணக்கை ஆரம்பித்து அவற்றை வைப்புச் செய்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். நாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் டொலர்களை கொள்ளை விலைக்கு இலங்கைக்கு அனுப்ப போவதில்லை.
எங்களுக்குரிய எதனையும் ஆட்சியாளர்கள் கொள்ளையிட்டு சாப்பிட விட மாட்டோம். நாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் டொலர்களை இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பபடுவதை தேட வேண்டும்.
வெளிநாடுகளில் சம்பாதிக்கும் பங்களாதேஷ் பிரஜைகள் கார்களை கொள்வனவு செய்துக்கொண்டு அவர்களின் நாட்டுக்கு செல்கின்றனர்.
நாட்டின் ஆட்சியாளர்கள் குறித்து மக்கள் கசப்படைந்துள்ளனர்.
அத்துடன் இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் தொழில் புரியும் மற்றும் வசிக்கும் இலங்கையர்கள் எவ்வித தேடிப்பார்புகளையும் மேற்கொள்ளவதில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளனர்.



