தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ஈரான்.. பல நாடுகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்
வளைகுடா நாடுகள் மீது ஈரான் இன்று(08/03/2026) காலை முதல் தனது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதன்படி, குவைத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் கிடங்கை பல ட்ரோன்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், எனினும், தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல்கள்
அத்துடன், குவைத்தில் உள்ள சமூகப் பாதுகாப்புக்கான பொது நிறுவனத்தின் கட்டிடத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதன் காரணமாக 22 மாடிகளைக் கொண்ட குறித்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தெய்வாதீனமாக எவ்வித உயிர்சேதங்களும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், சவுதி அரேபியா மீதும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், இன்று காலை குறைந்தது 21 ட்ரோன்கள் வரை அழிக்கப்பட்டதாக அந்த நாடு அறிவித்துள்ளது.
இதேவேளை, பஹ்ரைனில் ஒரு பல்கலைக்கழக கட்டிடத்தின் மீது ஏவுகணைத் துண்டுகள் விழுந்து மூன்று பேர் காயமடைந்ததாகவும், நாட்டில் ஒரு உப்புநீக்கும் ஆலையும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையை கடந்து செல்லும் 60 ஆயிரம் கப்பல்கள் : போர் நீடித்தால் இலங்கைக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து
YOU MAY LIKE THIS VIDEO