இந்தியாவின் முடிவால் இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி
கோதுமை மா ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால் இலங்கைக்கான மா இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் வர்த்தக அமைச்சிற்கு தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக கோதுமை மா இறக்குமதியை இந்தியா நிறுத்தியுள்ளது. எனவே, கோதுமை மா இருப்பை தக்க வைக்க இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவால் இலங்கைக்கு சிக்கல்
இந்தியாவில் இருந்தே கோதுமை மாவை இலங்கை இறக்குமதி செய்து வந்துள்ளது. எனினும் விரைவில் இந்தியாவில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு முழுமையாக இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது துருக்கியில் இருந்து மாத்திரமே கோதுமை மாவை இறக்குமதி செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு
இதனால் கோதுமை மாவிற்கு கடுமையாக தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதென சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.