அரிசி உள்ளிட்ட 48 பொருட்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை! வெளியான அதிவிசேட வர்த்தமானி
பொருட்கள் விற்பனை, உற்பத்தி மற்றும் இறக்குமதி குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
48 வகையான பொருட்களின் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல் மற்றும் விற்பனை தொடர்பில் பல நிபந்தனைகளை விதித்து இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை
உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் அல்லது எந்தவொரு நபரும் கோரும் பொருட்கள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிபந்தனை விதிக்கப்பட்டுள்ள பொருட்கள்
மேலும், அரிசி, கோதுமை மா, முட்டை, பருப்பு, டின் மீன், பால் மா, வெள்ளைப்பூண்டு, கோழி இறைச்சி, பயறு, உருளைக்கிழங்கு, காய்ந்த மிளகாய், சீனி, சீமேந்து, மணல், மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள், உரம் போன்ற 48 பொருட்களுக்கு இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - கமல்