திருகோணமலையின் வளங்களை பாதுகாப்பதற்கு வீதியில் இறங்க வேண்டி ஏற்படும்: தேரர்கள் எச்சரிக்கை (Videos)
திருகோணமலையின் வளங்களை பாதுகாப்பதற்கு வீதியில் இறங்க வேண்டி ஏற்படும் என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) முன்னிலையில் தேரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (06) அரசாங்க வெளியீடு பணியகத்தின் திறப்பு விழா நிகழ்வின்போது கலந்து கொண்ட டலஸ் அழகப்பெருமவிடமே இவ்விடயத்தை தேரர்கள் குறிப்பிட்டனர்.
திருகோணமலை எண்ணெய் குதங்களை விற்பனை செய்வதற்கு ஜனதா விமுக்தி பெரமுன மற்றும் ஜாதிக சங்விதானய அமைப்புக்கள் தங்களுடைய எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றது. ஆனாலும் சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள். இருந்தபோதிலும் திருகோணமலையின் வளங்களை பாதுகாப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
தேசிய சொத்துக்களை பாதுகாக்காவிட்டால் வீதியில் இறங்க வேண்டிய நிலை ஏற்படும் என இன்று (06) இடம்பெற்ற திறப்பு விழாவிற்காக ஆசிரவாதம் வழங்க வருகை தந்த தேரர்கள் கூட்டாக இணைந்து இக்கோரிக்கையை ஊடகத் துறை அமைச்சரிடம் முன்வைத்தனர்.
இதன்போது திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கபில நுவன் அத்துகோரள, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டிகோரள ஆகியோர் அருகில்
இருந்தமையும் குறிப்பிடத்தக்கது

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியா? ஹீரோவாக களமிறங்கும் இளம் இயக்குநர்.. யார் தெரியுமா Cineulagam
