மீண்டும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும்: மருத்துவர் ஹேமந்த ஹேரத்
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வதை கட்டுப்படுத்த முடியாமல் போனால், பாரதூரமான கட்டுப்பாடுகளை கட்டாயம் விதிக்க நேரிடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்காது போனால் மரணங்கள் குறையும் என்பதை எதிர்பார்க்க முடியாது என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளரும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளருமான மருத்துவர் ஹேமாந்த ஹேரத் (Hemantha Herath) கூறியுள்ளார்.
தற்போது மரணமடையும் கொரோனா நோயாளிகளில் பலர், சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்கள்.
நாடு திறக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள சுகாதார வழிகாட்டல்களை கடுமையாக பின்பற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.