வகுப்பறையில் மாணவர்களிடையே கோவிட் தொற்று பரவுமா? வைத்தியர் வெளியிட்ட தகவல்
பாடசாலை வகுப்பறைகளில் ஒரு மாணவரிடமிருந்து மற்றுமொரு மாணவருக்கு கோவிட் தொற்று பரவும் அபாயம் மிகவும் குறைவு என லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக மாணவர்களிடம் கோவிட் தொற்று அதிகளவு பரவி வரும் நிலையில், பெரும்பாலான குழந்தைகள் வௌி சமூகத்தில் இருந்தே கோவிட் தொற்றால் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,வகுப்பறைகளில் வயதான மாணவர்களிடையே கோவிட் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வகுப்பறையொன்றில், கோவிட் தொற்று உறுதியான மாணவரிடமிருந்து, ஒரு மீற்றர் இடைவெளியை பேணி, முகக்கவசம் அணிந்து, முகத்துக்கு நேரான தொடர்பினை கொண்டிராத சக மாணவர்கள், தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சின் புதிய சுகாதார வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 3 நாட்கள் முன்
சொத்து விஷயத்தில் குணசேகரன் அதிரடி, ஜனனியின் நிலை...எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
திடீரென பற்றியெரிந்த ஈரான் தலைநகர் - அமெரிக்காவை அச்சுறுத்தும் ஈரானின் ஸ்லீப்பர் செல்ஸ் News Lankasri