நாட்டுக்கு பாரமான கள்வர் குடும்பத்தை திருப்பதி கடவுள் பார்ப்பாரா? (Video)
ராஜபக்ஷ கூட்டத்தினர் இன்று, நாளைக்கு மாத்திரம் அல்ல , அடுத்த பரம்பரைகளுக்கு மாத்திரம் அல்ல, அடுத்த ஜென்மங்களுக்கு சேர்த்து பெரியவர் தொடக்கம் சிறியவர் வரை சம்பாதித்து விட்டார்கள் என ஐக்கிய பிரஜைகள் ஒன்றியத்தின் ஒருங்கமைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அவர்கள் கொடுப்பதாக கூடி கொடுத்தாலும் அது எம் பணம் தான். கொடுப்பதை போல் கொடுத்துவிட்டு பின்னர் அதை மீண்டும் பெற்றுக்கொள்ள 3,4 மடங்கில் பெரியளவில் கொள்ளையடிப்பார்கள்.
ஆகவே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் அந்த கழிவு கப்பலுக்கு எமது பணத்தையே இவர்கள் கொடுப்பார்கள். இவர்கள் திருப்பதி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்கின்றார்கள்.
திருப்பதி கோவில் அல்ல இந்த நாட்டை வழிநடத்திய 33கோடி கடவுள்களையும் வழிபட்டாலும் இவர்களுக்கு எந்த புண்ணியமும் கிடைக்காது. 2,3 மாதங்களுக்கு முன்னர் திருப்பதி கோவிலின் பிரதான பூசாரி கோவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தார்.
பிரதான பூசாரியை பார்க்காத திருப்பதி கடவுள் இந்த கள்வர்களை பார்பாரா? திருப்பதி கடவுளை வழிபட கோடிக்கணக்கில் செலவு செயகின்றார்கள். தனியார் விமானங்களில் செல்கின்றார்கள்.
இவை அனைத்துமே எம் பணம் தானே. இவர்கள் கடவுள் வழிபட செல்வதும் எம் பணத்தில்.புதுமையான ஒரு குடும்பம் இது. இப்படியான நாட்டுக்கு பாரமான வீணாய் போன ஒரு கள்வர் குடும்பத்தை கடவுள் பார்பாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan